ஜெயலலிதாவின் மதுவிலக்கு அறிவிப்பு ஏமாற்று வேலை: மு.க.ஸ்டாலின், திருமா கருத்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மதுவிலக்கு அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் அது ஏற்புடையதல்ல என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னையில் நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உள்ளதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஆதரித்தும், எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதா அறிவித்துள்ள படிப்படியான மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அதேசமயம் இது மக்களை ஏமாற்றும் முயற்சியாக இருக்கலாம் என்றும், அவரது பேச்சில் நம்பகத்தன்மையை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா அச்சத்திற்கு ஆளகியுள்ளதாலே மதுவிலக்கு பற்றி அறிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார், அதேபோல் தமிழகத்தின் ஏன் அமல்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications