வரலாறு காணாத பேரழிவு.... மூழ்கிய கடலூர் சேதங்களை பார்வையிடுவாரா ஜெ.?
கடலூர்: சுனாமி, தானே புயலை விட மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளது கடலூர் மாவட்டம். ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமுமே வெள்ளத்தால் அழிந்து போயுள்ள நிலையில் தற்போதைய பேய்மழை அம்மாவட்டத்தை உலுக்கி எடுத்து வருகிறது. இப்போதாவது முதல்வர் ஜெயலலிதா அழிந்து கொண்டிருக்கும் கடலூர் மாவட்ட வெள்ளசேதங்களை பார்வையிட வருவாரா? என்பதுதான் அந்த மக்களின் எதிர்பார்ப்பு.
கடலூர் மாவட்டமே வெள்ளத்தால் மிதக்கிறது... மிகப் பெரிய ஏரிகளான வீராணமும் வாலஜா ஏரியும் நிரம்பி வழிகிறது... செங்கால் ஓடையில் மழை வெள்ள நீரோடு என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றும் நீரும் சேர பரவணாறை பதம் பார்க்க ஊரெங்கும் வெள்ளம்...

கெடிலம் ஆறு தூர்வாரப்படாததால் திசைவழி தெரியாது தென்படும் திசையெல்லாம் வெள்ளம் புக பெரும் நாசக்காடாகிப் போய்கிடக்கிறது கடலூர்... முகத்துவாரங்கள் முன்கூட்டியே சீரமைக்கப்படாததால் கடலுக்குள் செல்ல முடியாத அத்தனை நீரும் கடலூருக்குள் புகுந்துவிடுகிறது..
கடந்த கால சுனாமி மற்றும் தானே புயலின் கோரத்தாண்டவத்தை விட இந்த பருவமழை போடும் பேயாட்டம் கடலூரை அழித்துப் போட்டிருக்கிறது.. இந்த பெருமழை வெள்ள மீட்புப் பணிகளில் தமிழக அரசு மும்முரம் காட்டியிருந்தது.. ஆனால் அது முடிவதற்குள்ளாகவே அந்த முகாம்கள் மூடப்படுவதற்குள்ளாகவே மீண்டும் பெருமழை...
கடந்த மழைவெள்ளத்தைப் பார்வையிட வராத முதல்வர் ஜெயலலிதா மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த பேய்மழை வெள்ளத்தின் பாதிப்புகளையாவது அறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக வருவாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.
இதனிடையே பிரதமர் மோடியும் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வரக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications