ஏழாவது முறையாக அதிமுக பொதுச் செயலராகும் ஜெயலலிதா!
அதிமுக பொதுச் செயலாளராக ஏழாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்தத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து 2,467 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

இந்த விருப்ப மனுக்களின் கட்டணமாக மட்டுமே, ரூ.6 கோடியே 15 லட்சம் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் உள்கட்சித் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையராக கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஞாயிற்றுக் கிழமையோடு நிறைவடைந்தது.
இதுவரை முதல்வர் ஜெயலலிதா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ஜெயலலிதா போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 29-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆறு முறை பொதுச் செயலாளராக ஜெயலலிதா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications