அமாவாசை ஆபத்து... தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?- 6 பேருக்கு ஜெ. கல்தா
சென்னை: அமாவாசைக்கு இன்னும் மூன்று தினங்கள் உள்ளநிலையில் தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011 - 2016 அதிமுக ஆட்சி காலத்தில் அமாவாசை வரப்போகிறது என்றாலே அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்கும்.
அமைச்சரவையில் யார் தலை உருளுமோ என்ற எண்ணம்தான் அமைச்சர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. அவர்கள் நினைப்பது போலவே அமாவாசை, பவுர்ணமியை ஒட்டியே அமைச்சரவை மாற்றம், அமைச்சர்கள் நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று 28 பேர் கொண்ட புது அமைச்சரவை மே 25ம் தேதி பதவியேற்றது. அமைச்சரவை பதவியேற்ற இரவே 4 புதிய அமைச்சர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு 32 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
மத்தியில் மோடி அரசில் அமைச்சரவையில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழக அமைச்சரவையிலும் விரைவில் மாற்றம் வரக்கூடும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம்
அமைச்சர்களுக்கு 6 மாதம் கெடு கொடுத்த ஜெயலலிதா அதன் அடிப்படையில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சில அமைச்சர்கள் மீது இப்போதே புகார்கள் கிளம்பியுள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவல் பரவியுள்ளது.

ஒப்பந்தப்பணியில் பேரம்
அமைச்சராக பதவியேற்ற உடனே சீனியர்களை மதிக்காமல் பேசுவதாக எழுந்த புகாரினால் மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்தார் ஒரு அமைச்சர். விரைவில் அவரது அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வரும் என்று பேசிக்கொள்கின்றனர்.

விஐபிக்கும் ஆபத்து
அமைச்சருக்கு ஆலோசனை சொன்ன விஐபி அமைச்சருக்கு ஆபத்து காத்திருக்கிறதாம். ஜூனியர் அமைச்சர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையாம்.

விழும் விக்கெட்டுகள்
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அமைச்சரான இருவரும், இரண்டு பெண் அமைச்சர்களும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications