39,537 வாக்குகள் வித்தியாசத்தி்ல் ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழனை போட்டியிட்டார். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை வேந்தரான வசந்தி தேவி போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்.கே.நகரில் அதிமுக முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம், 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார். தற்போது 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை அவர் தோல்வியடைந்துள்ளார். ஒருமுறை விதிகளுக்குப் புறம்பாக நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியாகின.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார் ஜெயலலிதா. அவரை எதிர்த்து நின்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்திருந்தனர்.
ஆனால், இம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பாதியாகக் குறைந்துள்ளது. தனது முந்தைய சாதனையை தக்க வைக்க அவர் தவறியுள்ளார்.
ஆனால், இது ஒருபுறம் இருக்க திமுக வேட்பாளரான சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் அவர் டெபாசிட் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications