இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெ.கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 27 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும், அவர்களது 71 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்துவருவது துரதிருஷ்டவசமானது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த 11 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லை கோடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவலையில் உள்ளது. மேலும், இந்தியா இலங்கை ஏற்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து எனது சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 71 படகுகளையும் விடுவிப்பதற்கு வெளியுறவு துறை மூலம் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications