முருகனின் ஜீவசமாதி தீவிரம்.. சிறையில் 6வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் ஜீவசமாதி அடைய விரும்பி இன்று 6வது நாளாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன் இன்று 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து இதனைத் தொடர்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார்.

பழங்கள் மட்டும் உண்டு..
இதனைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதியில் இருந்து முருகன் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். பின்னர் 18ம் தேதியில் இருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து வருகிறார். மேலும் யாரிடமும் பேசாமல் மவுனவிரதமும் இருந்து வருகிறார்.

பிரதமருக்குக் கடிதம்
இதனைத் தொடர்ந்து, தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார். சிறைத்துறையின் மூலம் அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள் அழுத்தம்
இதனிடையே சிறை அதிகாரிகள் விரதத்தைக் கைவிடுமாறு முருகனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் சோர்வாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

6வது நாள் உண்ணாவிரதம்
இதனைத் தொடர்ந்து, முருகன் இன்று 6வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். இதனால் அவரது ஜீவசமாதி விருப்பம் தீவிரம் அடைந்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications