மீண்டும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்... காலவரையற்ற கடையடைப்பு!
சென்னை: கலால் வரி உயர்வைக் கண்டித்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தங்கம் மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய பொது பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் மீதான கலால் வரியை ஒரு சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு. இதனைக் கண்டித்து தங்கம் மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்தது. இதனால், கடந்த ஞாயிறன்று கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தங்கம், வைர நகை கடை உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நகைக்கடைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.

காலவரையற்ற கடையடைப்பு...
இந்நிலையில், தற்போது மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்ப்பு..
இது தொடர்பாக அகில இந்திய கற்கள் மற்றும் தங்க நகைகள் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘எங்களது கூட்டமைப்பில் உள்ள 358 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கலால் வரி உயர்வை எதிர்த்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்.

போராட்டம் தொடரும்...
அரசிடம் இருந்து எங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை இந்தப் போராட்டம் தொடரும்' என்றார்.

வர்த்தகம் பாதிப்பு...
கடந்த ஆறு நாள் கடையடைப்பு போராட்டத்தின் மூலமாக சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிய கடைகள்...
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து பெரிய கடைகள் அடைக்கப்பட்டுள்ள போது, பல இடங்களில் சிறிய நகைக்கடைகள் திறந்தே காணப்படுகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications