திருச்செந்தூர் கோயில் அருகே நிறுத்தப்பட்ட காரிலிருந்து பணம், நகை திருட்டு
திருச்செந்தூர் முருகன் கோயில் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, சுவாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தரின் காரிலிருந்து நகைகள் மற்றும் போன்கள் திருடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நிறுத்தியிருந்த காரில் நகை, பணம் திருடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள படுக்கப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கடலூரில் குடும்பத்துடன் வசித்தபடி, அங்கு மாளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் காரில் ஊருக்கு வந்த சுடலைமணி பின்னர் திரும்பும் வழியில் திருச்செந்தூருக்கு வந்தார். அங்கு முருகன் கோயில் ஓரத்தில் காரை நிறுத்திய அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்னர் நாழி கிணறு மற்றும் கடலில் குளித்து விட்டு கோயிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர்.

காருக்கு தி்ரும்பிய அவர்கள் காரில் வைத்து விட்ட சென்ற நகைகள் மற்றும் போன்கள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 14 பவுன் நகை மற்றும் இரண்டு செல்போன்கள், ரூபாய் 16 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறிதது சுடலைமணி உடனடியாக திருச்செந்தூர் கோயிலில் புகார் அளித்தார். எஸ்ஐ ராஜகுமாரி, சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை ஆய்வு செய்தனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்படாத நிலையில் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications