சசிகலாவை சந்தித்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்
திவாகரன் மகன் ஜெயானந்த் சசிகலாவை தி.நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை: சசிகலா பரோலில் வெளியே வந்த நிலையில் அவரை திவாகரனின் மகன் ஜெயானந்த் சந்தித்து பேசினார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அடைக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
இதுதொடர்பாக சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன் அவருடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

நடராஜன் நிலை மோசம்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

பல்லுறுப்பு செயலிழப்பு
நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு அவருக்கு கடந்த 4-ஆம் தேதி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சசிகலா பரோல் மனு
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வர மனு அளித்தார். அந்த மனுவில் சில ஆவணங்கள் சரியில்லாததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வேறொரு மனுவை தாக்கல் செய்யவும் கர்நாடக காவல் துறை அறிவுறுத்தியது.

5 நாள்கள் பரோல்
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாள்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பரோல் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் நடராஜனை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு செல்கிறார்.

அத்தையை சந்தித்த ஜெயானந்த்
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த அத்தை சசிகலாவை அவர் தங்கியுள்ள தி.நகர் இல்லத்துக்கு சென்று திவாகரன் மகன் ஜெயானந்த் சந்தித்து பேசினார். இவர் சசிகலாவுக்கு எதிராக உள்ள தமிழக அரசை தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications