பாயும் வழக்குகள்... எடப்பாடி அரசுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட திவாகரன் மகன் ஜெயானந்த்
எடப்பாடி பழனிச்சாமி அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் திவாகரன் மகன் ஜெயானந்த், தற்போதைய கைது நடவடிக்கைக்கு எதிராக பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்றைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜெயானந்த்.
அதேபோல முன்னாள் அமைச்சர் பொன்னையனின் கருத்துக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார் ஜெயானந்த்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தினசரியும் அவரது உடல்நிலை குறித்த அதிகத் தகவல்களை பகிர்ந்துகொண்டது பொன்னையன்தான். ஜெயலலிதா நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அபரிவிதமான முன்னேற்றம் இருந்து வருகிறது. மிக விரைவில் வீடு திரும்பி கட்சி, ஆட்சிப்பணிகளை கவனிப்பார் என்று பேட்டி கொடுத்தார்.
இப்போது அவர், ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே 60 சதவிகிதம் உடல்நிலை மோசமடைந்திருந்தது. 40 சதவிகிதம்தான் நன்றாக இருந்தது. அவரது உடல்நிலை குறித்து, உண்மை வாரிசுகளான பொறுப்பாளர்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படவில்லை. அவரது உடல்நிலை மோசமடைய அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான் முக்கிய காரணம், என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள ஜெயானந்த், அப்பல்லோவில் அட்மிட் ஆகும் முன்பாக 40 சதவிகிதம் மட்டும் நன்றாக இருந்த ஜெயலலிதா, மெட்ரோ ரயில் விழாவில் எவ்வாறு பங்கேற்றிருக்க முடியும் என்று கேட்டுள்ளார். அரசுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் ஜெயானந்த்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications