தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி விருப்பமனு!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்று கோரி சமீபத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் போய் இணைந்த ஜோயல் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சீட் கேட்டு பலரும் விருப்ப மனுக்களை அளித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தென் மாவட்டத் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் ஜோயல் விருப்ப மனு அளித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தற்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். இன்று அவர் தனது ஆதரவாளர்களோடு அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்தார்.
அதில், தென்மாவட்ட தொகுதிகளான தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி அவர் மனு அளித்துள்ளார்.
இதுவரை ஸ்டாலின் சென்னையில் மட்டுமே போட்டியிட்டு வந்துள்ளார். நீண்ட காலமாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வந்த அவர் கடந்த தேர்தலில் முதல் முறையாக கொளத்தூரில் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications