ஜோக்கர் நல்ல திரைப்படம்... புகழ்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
ஜோக்கர் திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பாரட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்மையில் வெளியாகிய ஜோக்கர் நல்ல திரைப்படம் என்றும், இதுபோன்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சவாரி திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததை எதிர்த்து அந்த படத்தின் தயாரிப்பாளர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட கபாலி படத்துக்கு, இந்தியாவில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் சவாரி படத்தில் சைக்கோ கதாப்பாத்திரம் உள்ளதால் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என தெரியவில்லை. எனவே, சவாரி படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது வரிவிலக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, வரிவிலக்கு கொடுக்கப்பட்ட பல படங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு அளித்தாலும் சலுகை மக்களுக்கு போகவில்லை மாறாக டிக்கெட்டுக்கு முழு தொகை வசூலிக்கப்படுவதாகவும், அந்த தொகையும் முழுமையாக ஒருவருக்கு போவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு கொடுப்பதில் தவறில்லை எனக் கூறிய அவர் சமீபத்தில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் நல்ல படம் எனக் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications