சாத்தூர் அருகே பத்திரிகை நிருபர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச் செயல் !
சாத்தூர் அருகே பத்திரிகை நிருபவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர்: சாத்தூர் அருகே நவீன நெற்றிக்கண் வார இதழ் நிருபர் கார்த்திகை செல்வன் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் (40). இவர் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நவீன நெற்றிக்கண் வார இதழின் நிருபராக பணியாற்றி வந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் பங்குதாரராகவும் கார்த்திகை செல்வன் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டல் வெளியே பங்குதாரர் குருசாமியுடன், கார்த்திகை செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது டூவீலர் மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திகை செல்வனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது.
ரத்த வெள்ளத்தில் துடித்த கார்த்திகை செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாத்தூர் போலீசார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications