புதுவையில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு- பத்திரிகையாளர்கள், அதிமுகவினர் போராட்டம்- பாட்டில்கள் வீச்சு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் மீது அதிமுகவினர் பாட்டில்களையும் செருப்புகளையும் வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென நிதானமற்ற நிலையி, பத்திரிகையாளர்களைப் பார்த்து த்தூ......என காறித் துப்பினார் விஜயகாந்த். இது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் கிழித்து எறிந்தனர். இது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.
தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் விஜயகாந்த் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் விஜயகாந்த் தங்கியிருப்பதை கேள்விபட்ட பத்திரிகையாளர்கள் அங்கு முற்றுகையிட்டனர்.
விஜயகாந்த்தை ஹோட்டலில் இருந்து வெளியேற்றக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் செருப்பை ஏந்தியபடி விஜயகாந்த்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
விஜயகாந்த்தே வெளியேறு! என்று அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடியே ஹோட்டல் மீது பாட்டில்களை வீசினர். ஒருசிலர் ஹோட்டலுக்குள் நுழைந்து விஜயகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயற்சித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications