பெண் நீதிபதி மீது செருப்பு வீச்சு: பூந்தமல்லி கோர்ட்டில் பரபரப்பு !
திருவள்ளூர்: பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற பெண் நீதிபதி மீது கைதி ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தளவாடங்களைத் திருடியது, ரயில்களில் வழிப்பறி செய்தது தொடர்பான வழக்குகளில் ஏழுமலை (38) என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்காக ஏழுமலை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பெண் நீதிபதி நிஷா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏழமலைக்கு 15 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஏழுமலை நீதிபதியை விமர்சித்து தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி வீசியுள்ளார். செருப்பு நீதிபதி மேஜை மீது விழுந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் ஓடிச் சென்று ஏழுமலையை மடக்கி பிடித்துக்கொண்டனர்.
பின்னர் போலீஸ் வேனுக்கு அழைத்துச் செல்லும்போதும் நீதிபதியை திட்டியப்படியே ஏழுமலை சென்றுள்ளார். நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதி மீது செருப்பை வீசிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications