சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி.. இன்று பதவியேற்பு
சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்றுள்ளார்.
சென்னை: சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி தஹில் ரமணி இன்று பதவியேற்றுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக ஹுலுவாடி ஜி ரமேஷ் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக , நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணி, கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இந்த பரிந்துரையை மத்திய நீதி துறை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்றுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பதவியேற்பு விழா நடந்தது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னேர்செல்வம், ஆளுநர். பன்வாரிலால் புரோஹித், முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விழாவில் பங்கேற்றனர்.
இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக இருந்தவர். கடந்த டிசம்பரில் இருந்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 59 வயதாகும் இவர் 1982ல் பார் கவுன்சிலில் தன்னுடைய பெயரை பதிவு செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications