Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளவுத்துறை ஐ.ஐி.யாக கே.என்.சத்தியமூர்த்தி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உளவுத்துறை ஐ.ஐி.யாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி மண்டல ஐ.ஐி.யாக பணியாற்றி வந்த கே.என்.சத்தியமூர்த்தி தற்போது தமிழக உளவுத்துறை ஐ.ஐி.யாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

K.N.sathiyamurthy transper to inspector general of police intelligence

மேலும் டிஎஸ்பிக்கள் 17 பேருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரங்காத்தான், தில்லை நடராஜன் ஆகியோர் போலீஸ் அகடாமி கூடுதல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் நகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் துணை ஆணையராக குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இருவர், மத்திய அரசு பணி மற்றும் அயல் பணிக்கு மாற்றலாகி சென்றுள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர் நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஆனந்த், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த அஜய் யாதவ், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அயல் பணியாக சென்றுள்ளார். அங்கு, மூன்று ஆண்டுகள் பணிபுரிவார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+