சசிகலாவின் உண்மையான விசுவாசி தான் தம்பிதுரை.. கே.பி.முனுசாமி ஆவேசம்!
சசிகலாவின் விசுவாசியாக தம்பித்துரை செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தர்மபுரி: ஜெயலலிதா மேல் விசுவாசம் உள்ளவர் போல் காட்டிக் கொள்ளும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவுக்கு தான் உண்மையான விசுவாசியாக உள்ளார் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தர்மபுரி காரிமங்கலத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் சட்டத் திட்டங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தும் தம்பித்துரை உண்மையை மறைத்து சசிகலாவுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். ஜெயலலிதா மேல் விசுவாசம் உள்ளவர் போல் காட்டிக் கொண்டாலும், அவர் சசிகலாவுக்கு தான் உண்மையான விசுவாசியாக உள்ளார். சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் உள்ள விசுவாசத்தால் அ.தி.மு.க.வின் சட்டத் திட்டங்களை திருத்தி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.
சசிகலாவை தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்று தம்பித்துரை அடிக்கடி கூறி வருகிறார். அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் அடிப்படை தொண்டனுக்கு மட்டும் தான் உள்ளது என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளனர். அந்த உண்மை நிலையை மறைத்து சுயநலத்திற்காக அவர்களாகவே அறிவித்தது தான் சசிகலா நியமனம்.
சசிகலாவும், அவரது குடும்பமும் முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். சசிகலா மூலம் முதல்வரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவரை எங்களால் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஓ.பி.எஸ். தலைமையில் ஆட்சி தொடரவேண்டும் என்று மக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். சசிகலா மூலம் முதல்- அமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவரை நாங்கள் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications