”மீண்டும் தங்கபாலு” - சேலத்தில் போட்டியிட வாய்ப்பு
சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதால் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என்று இறங்கி விட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இதுவரை எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. காரணம் அவர்களைத் தேடி யாரும் வரவில்லை, அவர்களை சேர்க்கவும் யாரும் விரும்பவில்லை.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பலரும் டெல்லியில் முகாமிட்டு சீட் பெறுவதில் சுறுசுறுப்பாக காணப்பட்டனர்.
ஆனால் இந்த முறை யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்கள் இடையே ஆர்வம் குறைந்து விட்டது.
இதற்கிடையே, சேலம் தொகுதியில் இந்த தேர்தலில் போட்டியிட கே.வி.தங்கபாலு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து கட்சி பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது ,"நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். காங்கிரசை பொறுத்தவரை முதலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.
அவர் போட்டியிட வில்லை என்றால் அடுத்தபடியாக மாவட்ட தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அவரும் வேண்டாம் என்றால் அடுத்தபடியாக உள்ளவர்களுக்கு மாநில தலைமை யாருக்கு பரிந்துரை செய்கிறதோ, அவர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி சேலம் தொகுதியில் மீண்டும் தங்கபாலு போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. கடந்த முறை அவர் 3 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஓட்டுகள் பெற்றார். எனவே இந்த முறையும் அவர் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications