மோடி சர்க்காரின் 66 "நாயன்மார்களின்" பின்னணி இதுதான்.. கி. வீரமணி
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்ச்சரவையில் உயர்ஜாதியினர், குற்றப் பின்னணி உடையவர்கள், கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீர்மணி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடியின் அமைச்சரவை - 165 நாட்களுக்குப்பின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல ஆங்கில நாளேடுகளின் செய்தி விளக்கத் தகவல்களின்படி இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் ஓர் அரசு என்பதால், அவர்களது ஆணைப்படியும் பலர் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி வித்தையின் ஒரு பகுதியாக ஆளுமையை அதிகப்படுத்தி நடத்தும் அரசாக எங்கள் அரசு அமையும் என்று கூறி, வாக்கு வங்கியிடம் தீவிரப் பிரச்சாரத்தைச் செய்தது - இவ்வளவு குறுகிய காலத்திலேயே காற்றில் பறந்து விட்டது. இதைப் பல ஏடுகளும் கூடச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
முதலாவதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் குற்றப் பின்னணி உள்ளவர்களையெல்லாம் சேர்த்துள்ளனர்; இப்போது நீட்டப்பட்டுள்ள இந்த 66 பேர்களைக் கொண்ட அமைச்சரவையில் சுமார் 13 பேர்களுக்கு மேல் கொலை வழக்கு உட்பட பல்வகைக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர்!
‘இங்கு யாருக்கும் வெட்கமில்லை' என்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் ராஜ்யபாரம் துவங்கி விட்டது!
வெளியுறவுத்துறை முதற்கொண்டு பல அணுகுமுறையில், முந்தைய காங்கிரசின் தலைமையில் நடந்த அரசே பரவாயில்லை, என்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை, தமிழக மீனவர் பிரச்சினையில் மிக மோசமான கொடுமையே தொடருகிறது என்றும் அவர்தம் கூட்டணியில் இடம் பெற்று, எப்போது வெளியே வந்து, தமது தவறுக்குக் ‘கழுவாய்' தேடலாம் என்று கருதுகின்ற அவர்தம் தோழமைக் கட்சிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றன. வெளியேறத் துடித்துக் கொண்டுள்ளன!
‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இங்கே வேலையில்லை; பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்' என்று தேர்தல் நேரத்தில் பகிரங்கரமாய்ப் பேசி, அதனால் தேர்தல் சட்ட விதிகளின்படி கிரிமினல் செக்ஷன்கள் கீழ் வழக்கில் சிக்கிய பீகார் கிரிராஜ் போன்ற பூமிகார் என்ற உயர் ஜாதி பார்ப்பன வகுப்பாளர்கூட புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
165 நாள்களில் உண்மை - நிறம் வெளுத்து வெளியே வரும் நிலை! பீகாரில் மற்ற சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் நிலையைக் கவனித்தே பல பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்!
ஜாட் ஜாதி, ராஜபுத்திரர்கள், பார்ப்பனர்கள் பெரிதும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். 66 பேர்களில் சிறுபான்மையினர் முஸ்லீம்கள் இரண்டு பேர்களே! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களும் சிலரே. கட்சி மாறியதற்கான பரிசுகளாகவே அமைச்சர் பதவி தரப்பட்டுள்ள விசித்திரமும் உண்டு!
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications