யாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி
சென்னை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் எவ்வித காரணமும் இல்லாமல் இலங்கை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை, எவ்வித காரணமும் இன்றி, இலங்கை காவலர்கள் சுட்டுக் கொன்றுள்ள கொடுமை ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமையாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுன் ராஜ் சுலக்ஷன் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில்சென்றபோது, நிறுத்தச் சொன்னவுடன் நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, உடனே இலங்கை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். போர் முடிந்து 7 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், அரசியல் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல், கொடுமைக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் இந்திய அரசு என்ன செய்கிறது? இதுகுறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம், இந்திய அரசு கவலை கொள்ளவேண்டாமா?
இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு கோரத்தான் நமது இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சென்று பேசுகிறாரே தவிர, அங்குள்ள தமிழர் வாழ உரிமை பற்றியோ, அன்றாடம் அடித்து விரட்டப்படும் தமிழக மீனவர் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ பேசப் போயிருப்பதாகத் தெரியவில்லை'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications