காளை மாட்டை வைத்து கவிழ்ப்பு.. கி. வீரமணியின் எச்சரிக்கையும்... சுப்பிரமணியன் சுவாமியின் விருப்பமும்
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால் பாஜக ஆதரிக்கும் என்று தமிழிசை பேசியதன் மூலம் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி நடப்பதாக எச்சரிக்கை செய்தார் கி.வீரமணி. அதற்கேற்றபடி பாஜகவின் திட்டம
சென்னை: தமிழ் நாட்டின் எதிர்கால அரசியலையே காளையை மாட்டின் மூலமாக கவிழ்த்து விடலாம் என்று பாஜக கருதுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.
இன்று காலை கி. வீரமணி, "தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக அதனை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் அரசியலுக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்குவதற்கு இதுவே ஒரு சிறந்த திட்டமாக பாஜக உருவாக்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களைப் போன்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ளது" என்று கூறினார்.

மேலும், இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்றும் நாட்டின் எதிர்கால அரசியலையே கூட காளை மாட்டின் மூலமாக கவிழ்த்து விடலாம் என்று பாஜகவினர் கருதுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் கி. வீரமணி எச்சரிக்கை செய்தார்.
கி. வீரமணி சொல்லியது போன்றே, பாஜகவின் திட்டம் என்ன என்பதும் அது தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறது என்பதும் தெட்டத் தெளிவாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டர் பதிவு மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக அரசைக் கலைத்து விட்டு குடியரசு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் கனவாக இருக்கிறது. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜகவை நிலைநிறுத்திவிட முடியும் என்று அவர் நினைப்பது நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications