கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: திமுக ஓட்டு கணக்கு! அண்ணனுடன் தங்கைகளாய் நில்லுங்களேன்: சவுமியா அன்புமணி

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே, தங்கள் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சுயசார்புடன் செய்து கொள்ள முடியும் என்று பாமகவின் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. எனினும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அன்புமணி தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரை தொடர்ந்து சவுமியா அன்புமணியும் களத்தில் இறங்கியுள்ளார்.

Kalaignar magalir urimai thogai scheme Sowmiya Anbumani

பாமக பெண்கள் வாக்கு வங்கி

ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிட்ட போது, பெண்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.. பாமகவுக்கு இது பிளஸ்ஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, தமிழகம் முழுவதும் பெண்களை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், இதற்கு அன்புமணியும் ஓகே சொன்னதால், மகளிர் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை சவுமியா துவங்கி உள்ளார்..

மயிலாடுதுறை - சுற்றுப்பயணம்

இந்த பயணத்தின் மூலம், பாமக பெண்களின் வாக்குகளைத் திரட்டுவதில் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது தெளிவாகிறது. இது தமிழக அரசியலில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதுடன், பாமகவுக்கும் வலு சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

அநத்வகையில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பெண்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

சவுமியா அன்புமணி

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய சவுமியா அன்புமணி, "பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளின் வாழ்க்கைக்காகவும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க அன்புமணி ராமதாஸ் எடுத்த முயற்சியும், நடத்திய போராட்டங்களையும் யாராலும் மறுக்க முடியாது..

மகளிர் உரிமைத் தொகை

100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத அரசு, டாஸ்மாக் மூலம் பணம் சம்பாதித்து, அதில் ஒரு சிறு பகுதியை 'மகளிர் உரிமைத் தொகை' என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வாக்குகளை வாங்க முயற்சிக்கிறது..

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் கொடுக்கிறது.. தேர்தல் நெருங்கும்போது இந்த ஆயிரம் ரூபாய் எத்தனை ரூபாயாக மாறும் என்று தெரியாது.. எனவே பெண்கள் யாரும் இதற்கெல்லாம் ஏமாறக்கூடாது..

சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்றால் தங்கள் பகுதிகளுக்கு தேவையான சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொள்ள முடியும்..

அண்ணனுடன் தங்கைகள்

தமிழகத்தில் கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாகின்றனர். போதை நபர்களால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மது கடைகள் மூடப்படும் என்றும், குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.. அனைவரும் ஒற்றுமையாக பாமகவுடன் நிற்க வேண்டும்.. அனைவரும் அன்புமணி அண்ணனுடன் தங்கைகளாக நிற்க வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+