தேவகோட்டை பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப்போட்டி... வென்றோருக்கு பரிசு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஜுலை 27-ம் தேதி, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் கலாம் மாரடைப்பால் மரணமடைந்தார். கலாம் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் ஓவியப் போட்டியில் வென்ற முத்தையன், ஜெயஸ்ரீ, பாலமுருகன், கிஷோர்குமார், அஜய் பிரகாஷ், காயத்ரி, ஹரிஹரன், பரமேஸ்வரி ஆகிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாணவ, மாணவிகள் விமானங்கள் மற்றும் அப்துல் கலாம் மாதிரி வடிவங்களை செய்து கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications