இந்தியாவின் "அக்னி" யாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் - வெங்கய்யா பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நம் நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார் அவருக்கு எனது சலாம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

வடக்கே காசி தெற்கே ராமேஸ்வரம் புண்ணிய பூமிகள். டெல்லி காந்தி நினைவிடம் போல ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடமும் அனைவராலும் வந்து செல்லக்கூடிய இடம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

Kalam was India's Agni, says Venkaiah Naidu

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, வெங்கைய நாயுடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய வெங்கயா நாயுடு, முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், சிற்நத விஞ்ஞானி மட்டுமல்ல சிறந்த மனிதராவார்.

அப்துல் கலாம், ஜெயலலிதா என்ற இரு முக்கிய ஆளுமைகளை நாம் இழந்து விட்டோம். கடவுளுக்கு கருணையில்லை. காந்திஜியின் யுகத்திற்கு பின் தற்போது கலாமின் யுகம் தான் இளைஞர்களுக்கு எழுச்சியை ஊட்டியவர். அப்துல் கலாமி்ன் கனவுகளை நனவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மறைந்தாலும் நம் மனதில் சாகா வரம் பெற்றவர் அப்துல் கலாம். இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்ற அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாக ஆலோசனைகளை வழங்கியவர் அப்துல் கலாம்.

வடக்கே காசியைப் போல தெற்கே ராமேஸ்வரம் புனித பூமி. டெல்லி காந்தி நினைவிடத்திற்கு அடுத்து சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் வந்து செல்லக் கூடிய இடமாக கலாம் மணிமண்டபம் இருக்கும் என்றார்.

Student's Bigg Boss is Abdul Kalam Says Vivek-Oneindia Tamil

மிகச்சிறந்த மனிதராக அப்துல்கலாமை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former president Abdul Kalam was India's Agni, hailed Vice Presidential candidate Venkaiah Naidu.
Please Wait while comments are loading...