நீங்களே இப்படி செய்யலாமா ஆபிசர்? பொதுமக்களுக்கு அட்வைஸ் வேற! வெளியான வாக்குச்சீட்டு..யாருக்கு ஓட்டு?
கள்ளக்குறிச்சி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காவல்துறையினர் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர் ஒருவர் தான் செலுத்திய தபால் வாக்கினை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களில் சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள்: ஏற்பாடுகள் தயார்: இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களிக்க தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்ப தயாராக இருக்கிறது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியினர் ஈடுபடுவோர் தங்களது வாக்குகளை செலுத்த வசதியாக தபால் வாக்கு செலுத்தும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதன்படி காவல் துறையினர் அரசு அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் வாக்குச் சீட்டுகளை பெற்று தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்கினை அளித்து அதனை மீண்டும் செலுத்தலாம்.
கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: காவல்துறையினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் வாக்கு சீட்டை பெற்ற அரசு ஊழியர் ஒருவர் அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக வாக்களிக்கும் போது ரகசியம் காப்பது அவசியம். மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கூறக்கூடாது என்பதற்கும் தடை இருக்கிறது.
விதிமீறல்: இதன் காரணமாகத்தான் வாக்கு செலுத்தும் போது மறைவான இடத்தில் வைத்து வாக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தான் தபால் வாக்கு செலுத்தியதை அரசு அதிகாரி ஒருவர் புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக சார்பில் குமரகுரு, திமுக சார்பில் மலையரசன், பாமக சார்பில் தேவதாஸ் ராமசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீசன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
பாமகவுக்கு ஓட்டு: 07646 என்ற வாக்கு சீட்டினை பெற்ற அரசு ஊழியர் ஒருவர் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமிக்கு தனது வாக்கினை செலுத்தி இருக்கிறார். மேலும். அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்கும் போது ரகசியம் காக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில் அரசு அதிகாரி ஒருவரே தான் செலுத்திய வாக்கை பொதுவெளியில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடவடிக்கை தேவை: எனவே அந்த குறிப்பிட்ட எண் கொண்ட வாக்குச் சீட்டினை பெற்றவர் யார் என்பதை கண்டறிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. வடிவேலு காமெடியில் வருது வருது போல உங்களுக்குத்தானே நான் ஓட்டு போட்டேன் என வாக்குச்சீட்டை எடுத்து வந்து காட்டிய காமெடி தான் நினைவுக்கு வருகிறது என்றும் நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications