"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை தொடரும் நிலையில், தனியார்ப் பள்ளிக்கு ஆதரவாகப் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், இதை மறுக்கும் பெற்றோர் மாணவி உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

வன்முறை
கடந்த ஜூலை 17ஆம் தேதி மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளி மேஜைகள், ஆய்வகங்கள், பள்ளி பேருந்துகள் எனப் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.

விசாரணை
அதன் பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கலவரக்காரர்களைச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். அதேபோல பள்ளி மாணவி தொடர்பான வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வழக்கு
கலவரம் மற்றும் போலீசாரின் விசாரணை காரணமாக இதுவரை பள்ளி வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில், பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் கருதி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை விரைந்து திறக்க உத்தரவிடக் கோரி லதா கல்வி சங்கம் பொருளாளர் முருகேசன் என்பவர் சென்னை ஐகோர்டில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

பெற்றோர்
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைத் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வருவதாகவும் விரைவில் பள்ளி திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

திறக்க வேண்டும்
இதனிடையே இன்று கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்தனர். கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் இசிஆர் இன்டர்நேஷனல் பள்ளியை உடனடியாக திறந்து அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கோரிக்கை
பள்ளியைப் பராமரிக்க அனுமதி வழங்கி, உடனடியாக அதே பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த மனுவை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பெற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர். இரண்டு தினங்களில் பள்ளி பராமரிப்பு பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

நம்பிக்கை
கலெக்டரிடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மாணவரின் பெற்றோர் சந்திரமோகன், "பள்ளியைத் திறப்பது குறித்து இரு நாட்களில் அனுமதி வழங்குவதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும், கலவரக்காரர்களால் எரித்துச் சேதப்படுத்தப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சான்றிதழ்களும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். கலெக்டர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications