கள்ளக்குறிச்சி விவகாரம்.. மாணவி தங்கி இருந்த.. ஹாஸ்டல் குறித்து வெளியான புதிய தகவல்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது.
பள்ளியில் மாடியில் இருந்து கடந்த ஜூலை 13ஆம் தேதி அந்த மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

போராட்டம்
இருப்பினும், இதை மாணவியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். தங்கள் மகள் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

வன்முறை
போலீசார் வாகனத்திற்கு தீ வைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து, பள்ளி வளாகத்தையும் சூறையாடினர். நிலைமையைக் கட்டுப்படுத்த அருகேயுள்ள மாவட்டங்களில் இருந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன் பின்னரே நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது. வன்முறை தொடர்பாக வீடியோ பதிவுகளின் அடிப்படையில் இதுவரை 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திட்டமிட்டுத் தாக்குதல்
மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. பள்ளியின் நிர்வாகத்தில் இருந்தும் சிலர் கைது செய்யப்பட்டனர். வன்முறை நடைபெற்ற அன்றே அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். மேலும், திட்டமிட்டு ஒரு கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் இதற்காகத் தனியாக ஒரு குழுவைத் தொடங்கிய போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டியதும் தெரிய வந்துள்ளது.

மறு பிரேதப் பரிசோதனை
மரணம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில், மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதில் மாணவி தரப்பில் மருத்துவர் இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், இதுவரை மறு பிரேதப் பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
இந்தச் சூழலில் மரணம் தொடர்பாக இன்றைய தினம் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பள்ளியில் இயங்கி வரும் விடுதி தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தத் தகவல்களை போலீசாரின் எஃப்ஐஆரில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

முறையான அனுமதி இல்லை
அதாவது மாணவி தங்கி இருந்த பள்ளியின் விடுதியானது முறையான அனுமதி பெறாமல் முறைகேடாகச் செயல்பட்டு வந்துள்ளதாகக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார். இது தொடர்பாக எட்டு மாதங்களுக்கு முன்பே பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் இருப்பினும், அதையும் தாண்டி விடுதி முறைகேடாகச் செயல்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
Recommended Video

பாதுகாப்பு கிடைத்திருக்கும்
பள்ளி விடுதியில் முறையாக விதிகள் கடைப்பிடித்திருந்தால் மாணவிக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்ட சரஸ்வதி ரங்கசாமி, இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளது என்றும் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தெரிவித்தார். முறையாக அனுமதி பெறாமல் 24 பள்ளி மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் அனுமதியின்றி விடுதி செயல்பட்டதை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications