வாரிசு சான்றிதழ்.. போலி ஆவணத்தில் பட்டா மாற்றம்.. கள்ளக்குறிச்சி விஏஓவை விரட்டி வந்த நர்ஸ்.. சபாஷ்
கள்ளக்குறிச்சி: போலியான ஆவணங்களை வைத்து பட்டா மாற்றம் செய்த கள்ளக்குறிச்சி விஏஓ கைதாகி உள்ளார். போலியான வாரிசு சான்றிதழ் பெற்று, மெகா மோசடிக்கு காரணமான தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ என வரிசையாக கைதாகி உள்ளது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூரைச் சேர்ந்தவர் மரிய குளோரா.. 56 வயதாகிறது.. இவர், மும்பையில் நர்ஸாக வேலை பார்க்கிறார்.. இவர் சம்பாதித்த பணத்தை, எறையூரில் உள்ள சகோதரர்களான ஆரோக்கியசாமி மகன்கள் ஜோசப்ராஜ், ஆரோக்கியதாஸ் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

வாரிசு: மரிய குளோராவின் மகன் மைனர் என்பதால், ஜோசப்ராஜ், ஆரோக்கியதாஸ் 2 பேருமே, தங்களது தாய் கிறிஸ்தவ மேரியை கார்டியனாக நியமித்து நிலம் வாங்கியிருக்கிறார்கள்.. இதனிடையே, கிறிஸ்தவ மேரி, 2019 ஆகஸ்ட் 17ம் தேதி இறந்துவிட்டார்..
பின்னர், இருவரும் தங்களின் சகோதரிகளான மரிய குளோரா, புஷ்பா ஆகியோரை தவிர்த்து, தாங்கள் 2 பேர் மட்டுமே வாரிசு என்று 2021 ஆகஸ்ட் 17ம் தேதி போலியான வாரிசு சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். அந்த சான்றிதழை வைத்து நிலத்தையும் விற்றிருக்கிறார்கள்.. இந்த விஷயம் தெரிந்த மரிய குளோரா, போலி வாரிசு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடாஜலபதி, விஏஓ அமர்நாத் மற்றும் உள்ளிட்ட 6 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு: இந்த புகாரின்பேரில், தாசில்தார், டிஆர்ஓ, விஏஓ, ஜோசப்ராஜ், ஆரோக்கியதாஸ், அவரது மனைவி அந்தோணிசாமி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்ல, தன்னுடைய சொத்துக்களை பட்டா மாற்றம் செய்துள்ளனர் என்று கடந்த 2022ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இது தொடர்பான ஆவணங்களை மரிய குளோரா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பட்டா மாற்றியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க எலவனாசூர்கோட்டை காவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 பேர் கைது: அதன் அடிப்படையில் எலவனாசூர்கோட்டை போலீசார், இந்த புகார் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 4 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அமர்நாத்தை நேற்று கைது செய்துள்ளனர்.. இவர்தான், ஆவணங்களை போலியாக தயார் செய்து பட்டா மாற்றம் செய்தவர்.. அன்றைய சமயத்தில், ஏறையூர் கிராம நிர்வாக அலுவலராகவும் பணியில் இருந்தவர்..
விஏஓ கைது: முன்னதாக, அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டீ. ஒரத்தூர் , பா.கிள்ளனூர் கிராமத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றிவந்தார்.. தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலியாக வாரிசுசான்றிதழ், போலியான ஆவணங்களை வைத்து பட்டா மாற்றம் போன்ற முறைகேடான காரியத்தை செய்து கைதாகியிருப்பவர்களிடம், தற்போது விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications