கள்ளக்குறிச்சியில் கிராம பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.. SIR பணி பிரஷரால் முடிவு என புகார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் ஜாகிதா பேகம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தங்கள் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜாகிதா பேகம். இவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஜாகிதா பேகம் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணமாக என்ன என்பது தெரியவில்லை.
அதேவேளையில் குடும்பத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஜாகிதா பேகம் மனஅழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி வாக்காளர் பட்டியில் தீவிர திருத்தம் தொடங்கியது. இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர் ) 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியில் பெயர் இருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் வாங்கி அதனை பூர்த்தியிட்டு திரும்ப பெறும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விண்ணப்பத்தை முறைப்படி நிரப்பி கொடுத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை பறிக்கப்படும். இதனால் தான் எதிர்க்கட்சிகள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களை தேடி தேடி விண்ணப்ப படிவம் வழங்குவது ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் துறையினர் ல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications