அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் கட்சி தொடங்கி இருப்பது தமிழர்களுக்கு அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் கட்சி தொடங்கி இருப்பது தமிழர்களுக்கு அவமானம் என்று பொன்னார் விமர்சித்துள்ளார்.
Recommended Video

விழுப்புரம் : தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எதுவுமே தெரியாத அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் தனது கட்சியைத் துவங்கி இருப்பது தமிழ்நாட்டிற்கு பெரும் அவமானம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மதுரை ஒத்தக்கடையில் நேற்று தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார். இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, கமலின் அரசியல் கட்சி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பற்றி எதுவுமே தெரியாத அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமலஹாசன் கட்சி தொடங்கியுள்ளார். இது தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஆகும்.
தமிழ்ச் சிந்தனையே இல்லாத ஒருவரை வைத்து கட்சி தொடங்கினால், அந்தக் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் விரைவில் அவருக்குப் புரிய வைப்பார்கள்.
தமிழகத்திலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுபோல, பாஜக ஆதரவும் பெருகிக்கொண்டே போகிறது. வரும் காலங்களில் அது தெரியவரும்.
இன்னும் இரண்டு தினங்களில் பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரி வர இருக்கிறார். ஆரோவில் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications