பாண்டவர் அணி வெற்றி: விஷால் அர்ஜுனன் என்றால், கமல்தான் கிருஷ்ணர்.. ரசிகர்கள் புகழாரம்!
சென்னை: தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த பாண்டவர்களின் பரமாத்மா கண்ண பிரானாக இருந்து வழிகாட்டியது உலக நாயகன் கமல்ஹாசன் என்று அவரது ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து சோஷியல் மீடியாக்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக பதவிகளில் இருந்து பழம் தின்று கொட்டைபோட்ட, ராதாரவி உள்ளிட்டோரை இப்போதுதான் முதல் தேர்தலில் போட்டியிட்ட விஷால் அணி (பாண்டவர் அணி) தோற்கடிக்க முக்கிய காரணம் கமல் மற்றும் அவரின் செல்வாக்கு என்று கூறப்படுகிறது. நாசரை தலைவராக முன்மொழிந்ததும் கமல்தான்.

ரஜினி vs கமல்
தமிழர் மற்றும் பிற மொழியினர் என்று சங்கத்தில் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று சங்கத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரஜினிகாந்த் கோரிக்கைவிடுத்தார். இந்நிலையில் நடுவில் புகுந்த கமல், இந்திய ரசிகர் சங்கமாக, இது மாற வேண்டும் என்று ஒரு கோல் போட்டுச் சென்றார்.

போரிடாமல் வெற்றி
பாண்டவர் வெற்றிக்கு கண்ண பரமாத்மாதான் மூல காரணம். அதுபோல பாண்டவர் அணியின் வெற்றிக்கு கமல்தான் கண்ண பரமாத்மா என்கின்றனர் அவரது ரசிகர்கள். மகாபாரதத்தில் போரில் ஈடுபடாமலே, ராஜதந்திரங்களால் அர்ஜுனனுக்கும், அவனை நம்பிய பாண்டவர்களுக்கும் வெற்றியை ஈட்டித்தந்தவர் கிருஷ்ணர். போலவே, அர்ஜுனன் ஸ்தானத்தில் இருந்த விஷாலுக்கு, பாதை காட்டியது கமல்தான் என்று கிசுகிசுக்கிறது திரையுலக வட்டாரம்.
|
செல்லியடிப்பார்
ஜெயிக்கிற அணியுடன் எப்போதும் ரஜினி இணக்கமாக இருப்பார். கமல்தான் போட்டியை விரும்பி ஏற்று வெற்றிவாகை சூடுவார் என்கிறது இந்த டிவிட்.
|
ஸ்கெட்ச் போட்ட கமல்
விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட கூடாது என தமிழக அரசு தடுத்தபோது, நடிகர் சங்கம் கப்சிப்பாக இருந்தது கமலுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியதாக கூறப்பட்டது. அதன்பிறகுதான், நான் வெளிநாடு சென்றுவிடுகிறேன் என்று கமல் கூற, அதையடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவு மழை பொழிந்து, பின்னர் படம் ரிலீசானது. எனவே துடிப்பான நடிகர் சங்கமாக கட்டமைக்க கமல் போட்ட ஸ்கெட்ச் இது என்கிறது இந்த டிவிட்.
|
நடிப்பை தவிர்த்து சங்கமா
நடிப்பை பகைத்து நடிகர் சங்கமா? என்று கேட்கிறது இந்த டிவிட். கமல் ஒன்றும் அல்டிமேட் கிடையாது என்று ராதாரவி கூறியிருந்தார். நடிகர் சங்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு நடிப்பின் இலக்கணமான கமலை புறந்தள்ளிவிட முடியுமா என்று இந்த டிவிட் கேட்கிறது.
|
கலை நாயகன்
இப்பவும் கமல் தன் தலையில் வெற்றி போதையை ஏற்றியிருக்க மாட்டார். தன் அடுத்த படத்தோட கதைய பத்தி சிந்திச்சிகிட்டு இருப்பார் என்கிறது இந்த டிவிட்.
|
கிருஷ்ணார்ப்பணம்
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கதாநாயகன் இந்த பாண்டவர் அணிக்கு கமல் கதாநாயகன் என்கிறது இந்த டிவிட்.
|
இப்போ செய்யுங்க
கமல்ஹாசனை போல மிமிக்ரி செய்து, கேலி செய்தபடி, சரத்குமார் பிரச்சாரம் செய்ததை கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.
|
விதை போட்டார்
இப்போ விதைபோட்டாதான் பிற்காலத்தில் வரும் சந்ததிகள் அதன் பழத்தை உண்பார்கள் என்று, தேவர்மகன் படத்தில், கமலிடம், சிவாஜிகணேசன் பேசுவார். நடிகர் சங்கத்தில் விதை போட்டது கமல் என்கிறது தோட்டாவின் டிவிட்.
|
மாண்டவர் அணி
பாண்டவர் அணியின் முன்னால், எதிரணி மாண்டுவிட்ட அணியாகிவிட்டது. 'நட்புக்காக' திரைப்படத்தில், சரத்குமார் மற்றும் விஜயகுமார் கதாப்பாத்திரங்கள் இணைந்து சாவதை போல காட்சி இருக்கும். சங்க தேர்தலிலும், சரத்குமார் மற்றும் விஜயகுமார் இருவரும் ஒரே பக்கம் இருந்ததை இக்காட்சியுடன் ஒப்பிட்டுள்ளது இந்த டிவிட். இதனிடையே விஷாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியை கமல் ரசிகர்கள் பங்குபோடக்கூடாது என்பது போன்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications