அரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன்... தொடங்கியது தொடங்கியதுதான்... கமல்ஹாசன்
அரசியலை தாம் ட்விட்டரில் தொடங்கிவிட்டதாகவும் அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை: அரசியலை தாம் ட்விட்டரில் தொடங்கிவிட்டதாகவும் அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டிருக்கிறது.

திருடர்களை அனுமதித்தோம்
ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.. தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவோம் என்றார்.

தொடர்ந்து போராடுங்கள்
மேலும் அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம், தொடர்ந்து போராடுங்கள், விழித்திருங்கள் என்றார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

அரசியல் தொடங்கிவிட்டேன்
அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான். அரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன். அரசியலை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன?

கோட்டைக்கு போவது ஏன்?
கோட்டைக்கு செல்வதை வேறு அர்த்தமாக பார்க்க வேண்டாம். தொழிலாளியுடன் கோரிக்கைகாக செல்வதைப் போன்றதுதான் கோட்டை நோக்கிய பயணம். என்னை ட்விட்டர் நாயகன் என அரசியல் கட்சிகள் விமர்சிப்பதை விமர்சனமாகவே பார்க்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
-
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications