For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்கையில் திராவிடம் இருக்கும்.... திமுகவுடனான கூட்டணிக்கு அச்சாரம் போடும் கமல்ஹாசன்?

கொள்கையில் திராவிடம் இருக்கும் என கமல்ஹாசன் மீண்டும் கூறியிருப்பது திமுகவுடனான கூட்டணிக்கு அச்சாரம் போடுவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்ற கமல்- வீடியோ

    சென்னை: தமது கொள்கையில் திராவிடம் இருக்கும் என திட்டவட்டமாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பது திமுகவுடனான கூட்டணிக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது தமது பாதை 'ஆன்மீக அரசியல்' என்றார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்.

    ரஜினிக்கு பதிலடி தந்த ஸ்டாலின்

    ரஜினிக்கு பதிலடி தந்த ஸ்டாலின்

    அப்போது கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ரஜினியின் ஆன்மீக அரசியலை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். ரஜினியின் அரசியல், திராவிட அரசியலுக்கு எதிரானது என்பதால் திமுக தொடக்க நிலையிலேயே கடும் எதிர்ப்பைக் காட்டியது.

    கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

    கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

    ஆனால் கமல்ஹாசனோ திராவிடம், கருப்பு என திராவிட அரசியலின் சாயலில் தொடர்ந்து பேசி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.

    கொள்கையில் திராவிடம்

    கொள்கையில் திராவிடம்

    இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரை என் கொள்கையில் திராவிடம் இருக்கும். எனது கொள்கைகள் தங்களுக்கு ஒத்துவரும் என திமுக புரிந்து கொள்ளும்போது கூட்டணி குறித்து யோசிக்கலாம் என எதிர்கால கூட்டணிக்கு கோலப் புள்ளி வைத்திருக்கிறார்.

    கமலுக்கு அழைப்பு விடுத்த திமுக

    கமலுக்கு அழைப்பு விடுத்த திமுக

    அதேபோல ரஜினியை அப்படி கடுமையாக நிராகரித்த ஸ்டாலின், கமல்ஹாசனிடம் அரவணைப்பை வெளிப்ப்டுத்தியிருக்கிறார். திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு கமல்ஹாசனை அழைத்திருக்கிறோம்; அவரும் வருவதாக உறுதியளித்திருக்கிறார் என மென்மைப் போக்கை வெளிப்படுத்தினார்.

    திமுக கூட்டணியில் கமல்?

    திமுக கூட்டணியில் கமல்?

    கமலின் பேச்சுகளும் திமுக தலைமையின் பரிவும் திமுகவின் இயற்கையான கூட்டணி கட்சிகள் பட்டியலில் கமல்ஹாசனின் கட்சியும் இடம்பெறும் என்பதையே வெளிப்படுத்துகிறது. கருப்பு, திராவிடம் பேசும் கமலுக்கு திமுக, காவி- ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிக்கு பாஜக என்பதுதான் எதிர்கால அணிகளாக இருக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Kamal Haasan is leaving everyone guessing about his foray into the politics. Hours after meeting superstar Rajnikanth, Haasan on Sunday evening met DMK president M Karunanidhi and working president MK Stalin at their residence in Chennai's Gopalapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X