ஓட்டுக்கு பணம் தரவே மாட்டேன்...உரத்து சொல்லும் கமலின் முழக்கம் 'ரீச்' ஆகுமா?
ஓட்டுக்கு பணம் தரமுடியாது என்கிற கமல்ஹாசனின் முழக்கம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் வாக்குக்கு பணம் தர முடியாது என்பதை கொள்கையாகவே வைத்து இயங்கிவருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரைப் போலவே ஓட்டுக்கு நான் பணம் தரவே மாட்டேன் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிற கமல்ஹாசனும் அறிவித்திருக்கிறார்.
வாக்குக்குப் பணம் தருவது நாடு விடுதலை அடைந்த காலம் முதலே இருந்து வருகிறது. ஆனால் திராவிட அரசியலுக்கு எதிரான சக்திகள் திராவிட கட்சிகள் மட்டுமே காரணம் என திருமங்கலம், ஆர்.கே.நகர் பார்முலாக்களை வைத்து பிரசாரம் செய்தும் வருகின்றன.
இதனால்தான் தூய்மையான அரசியல்; மாற்று அரசியல் என்கிற முழக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக கொள்கையை பேசி தத்துவத்தை பேசி மட்டுமே ஓட்டு கேட்போம் என்கிறது நாம் தமிழர் கட்சி.

தத்துவ அரசியல்
இந்த தத்துவமும் முழக்கமும் இளைஞர்களை ஈர்க்கவும் செய்கிறது. அதேநேரத்தில் தத்துவ ஆசான்களையும் தத்துவங்களையும் நாம் தமிழர் நிராகரிக்கவும் இல்லை.

ஓட்டுக்கு பணம் இல்லை
தற்போது கமல்ஹாசன், தத்துவங்கள் இருக்கட்டும்... முதலில் ஊழலை ஒழிப்போம்... குறிப்பாக ஓட்டுக்கு பணம் தரவே மாட்டோம் என அதிரடியாக அறிவித்திருக்கிறார். கமல்ஹாசன் முன்வைக்கும் முழக்கம் நிச்சயம் நடுத்தர, மேல்தட்டு வாக்காளர்களிடையே அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கமலின் இலக்கு இவர்கள்தான்
இதைத்தான் கமல்ஹாசனும் விரும்புகிறார்.. கமல்ஹாசன் தேர்வு செய்த உயர்நிலைக் குழு என்பது எலைட் எனப்படும் மேல்தட்டு சமூகம்.. அரசியல் சீர்திருத்தம், மாற்று அரசியல் என்பது போன்றவற்றை விரும்புகிற சமூகம்.

கமல் இளையோர் குரலாக...
அச்சமூகத்தின் குரலாக, வளரும் இளையதலைமுறையால் நிராகரிக்கப்படும் வாக்கு பர்சேஸை வெறுக்கும் குரலாக பேசியிருக்கிறார் கமல்... கமல்ஹாசனின் இந்த குரலுக்கான ஆதரவு வாக்குகளாகுமா?












Click it and Unblock the Notifications