கண்ணே கலைமானே.. தாலாட்டை பாட வேண்டும்... ஸ்ரீதேவி குறித்து கமல் நெகிழ்ச்சி.. வீடியோ
Recommended Video

சென்னை: கண்ணே கலைமானே.. கன்னிமயில் என கண்டேன் உனை நானே என்ற தாலாட்டு பாடலைதான் நாம் பாட வேண்டும் என்று ஸ்ரீதேவியின் இறப்புக்கு வீடியோவில் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார். திடீரென நடந்துள்ள இந்த செய்தியால் சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் வீடியோ மூலமாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறுகையில், ஸ்ரீதேவி ஒரு அற்புதமான நடிகை, உச்ச நட்சத்திரம். இவையெல்லாம் விபத்துகள் அல்ல, முயன்று முயன்று படிப்படியாக அந்த குழந்தை நடந்து வந்த பாதை.

15 வயதில் சந்தித்தேன்
மூன்றாம் பிறையில் உள்ள பாடல் வரிகளுக்கேற்ப கன்னிமயில் என கண்டேன் என்பதை போல் அவரை 15 அல்லது 16 வயதுகளிலேயே நான் சந்தித்தேன்.

பாலசந்தர் அறிவுரை
குழந்தைத்தனம் மாறாத ஒரு பெண்ணாக அவர் இருந்தார். பாலசந்தரின் அறிவுரைக்கேற்ப ஸ்ரீதேவிக்கு நடனம் கற்றுக் கொடுப்பது, சிறிய சிறிய அசைவுகளை கற்று கொடுப்பது என வகுப்பில் மூத்த மாணவன் போல் அவருடன் பயணித்தேன். அவருடன் 27 படங்களில் நடித்துள்ளேன். அது கிட்டதட்ட சிறிய வாழ்நாள் காலம் ஆகும்.

திறமைகள் வளர்ப்பு
வாழ்க்கையின் ஒரு பகுதி வரை நான் அவருடன் பயணித்துக் கொண்டே இருந்தேன். பிறகு அவர் இந்திக்கு சென்றுவிட்டபோதும் கூட நானும் சிறிது தூரம் சென்றேன். பிறகு என் பாதை தனி என்று தெரிந்து வந்துவிட்டேன். அவர் பாதை வேறாகிவிட்டது. தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையுள்ள பெண்.

தாலாட்டு பாட வேண்டும்
அந்த குணாதிசயங்கள் எங்கள் இருவருக்கும் பொருந்தும் என்பதால் எங்கள் நட்பு ஒரு வியப்பும் பாசமும் கலந்த நட்பாகவே இருந்தது. மூன்றாம் பிறை படத்தில் கண்ணதாசன் எழுதிய தாலாட்டு பாடல் வரிகளைதான் இப்போது நாம் பாடவேண்டும்.

பெரும் தாரகை
நல்ல கலைஞரை இழந்துவிட்டோம். அவர் விட்டுச் சென்ற உத்வேகம் அவரை போல் பல தமிழ் கலைஞர்களை உருவாக்கும். இந்திய அளவில் உலக அளவில் பெருமை சேர்த்த பெரும் தாரகை என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications