கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காதீங்க!... கமல் தாக்கு
கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கக் கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்று கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பாஜகவின் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரனின் நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஜயேந்திரருக்கு தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.

அப்போது நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்ற போதும் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தமிழகம் முழுவதும் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்களும் கண்டனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜயேந்திரர் விவகாரம் குறித்து கமலிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை. தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை. தியானம் செய்வது எப்படி கடமையோ அதுபோல் எழுந்து நிற்பதும் கடமைதான்.
தமிழ்த்தாய் வாழ்த்து கண்ட இடங்களில் இசைக்கக் கூடாது என்றும் கமல் அதிரடியாக தெரிவித்தார். அவர் இந்த வார்த்தையை உள்நோக்கத்துடன் கூறியதாகவே பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications