"அசிஸ்டென்ட் தலைவர்களே".. கமலை பார்த்து கத்துக்கோங்கப்பா!
சென்னை: கமலை போல் மக்களுக்கு தேவையான அரசியலில் மற்ற தலைவர்கள் இறங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிராமங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் என்றும் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றும் காந்தியடிகள் கூறினார். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை கிராமத்திலிருந்து கொண்டு வர வேண்டும் என்பதே காந்தியின் ஆசை.
இதற்கு அடித்தளமாக கிராம சபை கூட்டங்கள் இருந்தன. இந்த கூட்டங்கள் மூலம் கிராமத்தில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி பணிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
[ இன்று மாலை திருமுருகன் காந்தி விடுதலை ஆகிறார்? ]

கமல்
கடந்த 25 ஆண்டுகளாக இந்த கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதும் கிராமங்கள் முன்னேற்றமடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய மறக்கடிக்கப்பட்ட பெரிய விஷயத்தை கமல்ஹாசன் தன் கையில் எடுத்துள்ளார்.

கமல் பார்வை
இன்று அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரமேரூர் அருகே களியாண்பூண்டி கிராமத்தில் கிராம சபை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் நடைபெறுகிறதா என்று பார்வையிட கமல்ஹாசன் சென்றிருந்தார்.

ஆலோசிப்பது
காந்தி பெயரை கூறிக் கொண்டு அரசியல் செய்வதாக கூறும் அரசியல்வாதிகள் யாரும் இதுவரை கிராம சபைகள் குறித்து மருந்துக்கு கூட கவலைப்பட்டதில்லை. இன்று அவரது பிறந்தநாளன்றாவது கிராம சபை கூட்டங்களின் மகத்துவம் குறித்து பேசுவது, கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசிப்பது என்று எந்த அரசியல்வாதியாவது செய்தார்களா என்றால் இல்லை.

குடிநீர்
இன்று பெரும்பாலான கிராமங்களில் நீர் நிலைகளில் அரசியல்வாதிகளும் பெரும் புள்ளிகளும் ஆக்கிரமிப்புகள் செய்துவிட்டதால் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. பள்ளிகளும் இருப்பதில்லை. படிப்பதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால் பல குழந்தைகள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

ஹைட்ரோ கார்பன்
மோசமான சாலைகளால் பேருந்துகளும் வருவதில்லை. ஏதோ தனித்துவிடப்பட்ட மக்கள் போல் அவர்களை எண்ணுவது ஏன். பொதுமக்கள் எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு செலவிடும் பணத்தை இதுபோன்று கிராம வளர்ச்சிகளுக்கு செலவிட்டு காந்தியடிகளின் கனவை நனவாக்குவோம். கமலை போல் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அரசியல் செய்யும் காரியங்களில் ஈடுபடாமல் மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications