எதற்குமே ஒத்திகை தேவை, அதைத் தான் இப்ப செய்றேன்.. கமல் தூக்கிப் போட்ட துருப்புச் சீட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மக்களைச் சென்றடையும் முன்னர் எதற்குமே ஒத்திகை தேவை, அதைத் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தினர் நடுவே உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று சந்திப்பு நடத்தினார். பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: என் முன்னால் இருக்கும் ரசிகர்களாகிய இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட கூட்டம் இது. 18 வயதில் சுவர் ஏறி குதித்து என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் இன்று தலை நரைத்து பேரன், பேத்தி எடுத்துவிட்டார்கள்.

நாங்கள் பல இன்னல்களையும் சந்தித்துள்ளோம். குறை சொல்லி அழவதற்கு அல்ல. 37 வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் களம் கண்டிருக்கிறோம். இவர்கள் தானம் கொடுக்கும் ரூபாய்கள் சிறிய அளவில் தான் இருக்கும். ஆயிரம் ரூபாய் நோட்டாகக் கூட இருக்காது, ஒற்றை ரூபாயாகத் தான் இருக்கும்.

 வியர்வையிலிருந்து கிடைக்கும் காசு

வியர்வையிலிருந்து கிடைக்கும் காசு

ஆனால் அவர்கள் கொடுக்கும் ரூபாய்கள் பழைய நோட்டுகளாக அழுக்கு படிந்து, ஆரத்துடன் இருக்கும். ஏனெனில் இது அவர்களின் வியர்வையில் இருந்து கொடுக்கும் காசு. அதை கொடுப்பதால் தான் இவர்களை வள்ளல் என்று சொல்கிறேன்.

 குணத்தைத் தூண்டி விடுகிறேன்

குணத்தைத் தூண்டி விடுகிறேன்

ஏனெனில் அவர்களுக்கே குறைவாகத் தான் இருக்கிறது. அதை கொடுக்க நினைக்கிறார்களே அந்த குணத்தை தான் நான் அவ்வபோது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் அனைவருமே தமிழகத்திற்கு ஒளி தரும் விளக்கு. இந்த விளக்கை நம்பி தான் நான் மக்கள் பணிக்கு ஆள் அனுப்புகிறேன் என்று சொன்னேன்.

 ஒத்திகை அவசியம்

ஒத்திகை அவசியம்

உலகத்திற்கு அறிவிக்கும் போது எந்த முன்ஏற்பாடோ ஒத்திகையோ இல்லாமல் நாடகமோ, புத்தகமோ, சினிமாவோ வெளியிடப்பட்டால் அது அவர்களுக்கு பிடிக்காது, பிடிபடாது. எனவே இப்போது நாம் மட்டும் ஒரு சில விஷயங்களை பேசுவோம் என்று கூறி சட்டென லைவ் பேச்சை கட் செய்ய உத்தரவிட்டு விட்டார் கமல்.

 மன்றத்தினரை தயார்படுத்தும் கமல்

மன்றத்தினரை தயார்படுத்தும் கமல்

எதற்குமே ஒத்திகை என்று கமல் சொன்னது அவரின் அரசியல் வருகையை குறித்ததாகத் தான் இருக்கும் என்பது யாருக்கும் சொல்லாமலே தெரிந்திருக்கும். அதற்காக ரசிகர் மன்றத்தினரை தயார் படுத்தும் பணியைத் தான் தற்போது அவர் தொடங்கியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhaasan hints that he is getting ready for politics and for that a trialer version is going now at a speech in front of fans lub at Kelmabakkam, Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற