விடிய விடிய தூங்க விடாம செய்து விட்டு எதுவும் சொல்லலைன்னா எப்படி "ஆண்டவரே"??
நடிகர் கமல்ஹாசன் கூறியது போல காலையில் வந்த ஆங்கில பத்திரிக்கையில் எந்த செய்தியும் வரவில்லையே ஆண்டவா என்கிறார்கள் ரசிகர்கள்.
சென்னை : புரியாதோருக்கு ஆங்கிலப் பத்திரிக்கையில் வரும் சேதி என்று ஆண்டவர் சொன்னதால் விடிய விடிய தூக்கம் போனது தான் மிச்சம் எந்த பத்திரிக்கையிலும் ஒரு சேதியும் வரவில்லை.
நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு திடீரென போட்ட டுவீட்டால் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, அரசியலும் பரபரத்தது. "தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்" என்று சொல்லியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். புரிந்தால் மகிழ்ச்சி புரியாவிட்டால் காலையில் ஆங்கில நாளேட்டில் வரும் சேதி என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் இன்றைய ஆங்கில நாளேடுகளில் கமல் கூறியது போல விடை எதுவும் இல்லை. அவரின் டுவிட்டை சுட்டிக்காட்டி கமல் அரசியலில் நுழையலாம் என்று செய்திகளை வெளியிட்டுள்ளன. தான் அரசியலுக்கு வருவது குறித்து குறிப்பு கொடுத்தாலும், முடிவெடுத்துவிட்டால் யாம் முதல்வர் என்று 'முதல்வர்' பதவியை குறிப்பிட்டு கமல் போட்ட டுவீட் அரசியல்வாதிகளிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி களம் காணும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ரஜினி பெரும்பாலும் தனிக்கட்சி தொடங்குவார் என்ற அளவில் அந்த ரஜினியின் அரசியல் பரபரப்புகள் அடங்கிப்போயின. இந்நிலையில் கமல் 'முதல்வர்' என்ற பதவியை சுட்டிக்காட்டி கூறியுள்ள கருத்தால் அவர் ஏதாவது கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா, அல்லது ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து கட்சி தொடங்குவார்களா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications