டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - ரூ.15 லட்சம் மது பாட்டில்கள் காலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீதான தாக்குதல்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில் காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை ஒன்று நாட்டு வெடிகுண்டுகளால் மர்ம நபர்கள் மூலமாக தகர்க்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - மதுராந்தகம் பகுதியில் முதுக்கரை என்ற இடத்தில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று அக்கடையின் மீது சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அக்கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மர்ம நபர்கள் தாக்குதலில் உடைந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications