காஞ்சிபுரம் அருகே பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி - லாரி மோதியதால் விபத்து
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பள்ளிச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மைதானச் சுற்றுச் சுவரில், இன்று உணவுப் பொருள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இதில், அந்த சுற்றுச் சுவர் இடிந்து பள்ளி மைதானத்தில் விழுந்தது.
அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளை அகற்றி மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலியான சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications