மு.க. அழகிரி குறித்த கேள்வி.... செய்தியாளர்களிடம் சீறிய கனிமொழி!!
கோவை: மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா? என்ற செய்தியாளர்களின் கேள்வியால் கோபமடைந்த திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, மைக்குகளை தட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. மகளிர் அணி சார்பில், அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு, ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பழ.கருப்பையா வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத் துக்குரியது. அ.தி.மு.க.விற்கு இது புதியதில்லை என்றாலும், எதிர்கருத்து கொண்டவர் என்பதற்காக தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேவையான போது கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், மு.க. அழகிரியின் பிறந்த நாளையொட்டி, அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என சொல்லப்படுகிறதே? என கேட்டனர்.
இதற்கு பதிலளிக்க மறுத்த கனிமொழி, கோபத்தோடு செய்தியாளர்களின் மைக்குகளை தட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நகர்ந்தார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications