'அக்ரி' விவகாரம்: தற்கொலை செய்த முத்துக்குமாராசாமி குடும்பத்தினருடன் கனிமொழி சந்திப்பு!!
நெல்லை: தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பினரின் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி குடும்பத்தினரை தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நெல்லையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற திமுக எம்.பி கனிமொழி நெல்லை வந்தார்.

முத்துகுமாரசாமியின் மனைவி சரஸ்வதி மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
முத்துகுமாரசாமியின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பேச உள்ளேன். இவ் வழக்கில் தொடர்புடைய அமைச்சரையும், அண்ணா தி.மு.க.வினரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நெல்லையில் மணிமுத்தாறு அணை பகுதியில் ரூபாய் 4 கோடியே 91 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்றதாக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கையெழுத்து போட வேண்டும் என்றும் குமாரசாமியை சிலர் மிரட்டி உள்ளனர். இதன் காரணமாக அவர் விருப்ப ஓய்வு வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
இவ்வாறு கனிமொழி கூறினார்.

குமாரசாமி வி.ஆர்.எஸ் வாங்கியதற்கு காரணம் ஏதும் இதுவரை கூறப்படாமல் இருந்த நிலையில், சிலரின் மிரட்டல் காரணமாகவே அவர் வி.ஆர்.எஸ் வாங்கியதாக இன்று கனிமொழி கூறி உள்ள தகவல் அதிகாரிகள்,அரசியல் வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மீத்தேன் திட்டம்- விளக்கம்
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திற்கும் , சட்ட ஒழுங்கிற்கும் எவ்வித சம்பந்தமும். இல்லை .மீத்தேன் எடுக்கும் ஒப்பந்ததத்தை கைவிட்டு விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் அதனை மத்திய அரசு கைவிடவில்லை. அந்த ஒப்பந்தக்காரர் தான் அதனை கைவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்காக அந்த மாநிலமே கொந்தளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை ஊடகங்கள் கூட கண்டுகொள்ளவில்லை.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதனை ஆதரிக்கும் நிலையில் தான் அவர்கள் இப்போது உள்ளனர் என்றார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications