தண்ணிர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்- கன்னட அமைப்பு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: தமிழக அரசுப் பேருந்துகள் இன்று ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபலேவில் முதல்வர் ஜெயலலிதா படத்தை எரித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால் கர்நாடகத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு பகிரங்கமாக எச்சரித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அத்திபலே இன்று போர்க்களம் போலக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்தபடி உள்ளன. இன்றும் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்தும், அவரது உருவப் படத்தை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 200க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர். ஓசூர் வழியாக கர்நாடகத்திற்குள் எந்த வாகனமும் நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் எந்த வாகனமும் செல்லவில்லை. இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.
அனைத்து வாகனங்களும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் வன்முறையும் போராட்டமும் குறைந்தால்தான் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1991 போன்ற கலவரத்தை சந்திக்க நேரிடும் என்று தமிழர்களின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு எச்சரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications