"அபார்ஷன்".. குமரி பாதிரியார் வீட்டில் நுழைந்த போலீஸ்.. அதைவிடுங்க.. அது யாரு டாக்டரம்மா.. அவங்களா?
கன்னியாகுமரி: பாதிரியார் பெனடிக் பற்றி தினம் தினம் வந்து கொண்டிருக்கும் புகார்களை எல்லாம் கேட்டு, குமரி போலீசாரே அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து உள்ளனராம்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார்.
இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

அரைநிர்வாணம்
பாதிரியாராக பணியாற்றுவதற்கு முன்பிருந்தே, பெண்களிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், சென்னையில் படிக்கும்போது ஒரு பெண்ணை 4 வருடங்களாக காதலித்துள்ளார்... அதே பெண்ணுக்கு கல்யாணமும் செய்து வைத்துள்ளார்... ஆனால், கல்யாணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடன் பெனடிக்ட் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்... இவர்கள் இருவரும் அரை நிர்வாணத்தில் பேசிக்கொண்ட வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டுகள் முதன்முதலில் இணையத்தில் வெளியாகியபோதுதான், பெனடிக்கின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்தது.. அதிலும், ஒரே வீட்டிற்குள் காண்டிராக்டரின் மனைவி, மகள், மருமகள் என ஒரே வீட்டில் 3 பேருடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு வைத்திருந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

சர்ச்சுக்குள்
கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், அவர்கள் வீட்டு பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே சர்ச்சுக்கு வரும் இளம் பெண்களிடம், அறிமுகம் செய்து கொண்டு, அவர்களுடைய வாட்சப் நம்பர் கேட்டு வாங்கி கொள்வாராம்.. அதற்கு பிறகு, குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்ப தொடங்குவாராம்.. அதற்கு யாரிடமிருந்தாவது ரிப்ளை வந்துவிட்டால், உடனே அவர்களிடம் அடுத்தகட்ட பேச்சை ஆரம்பிப்பாராம்.. அப்போது, 'நான் சர்ச்சில் மட்டும்தான் பாதிரியார்.. மற்றபடி எல்லாரையும் போல நான் சராசரி மனிதன்" என்று சொல்லி, அந்த பெண்களிடம் உள்ள தயக்கத்தை உடைத்து, "நீ அழகாய் இருக்கே, உன் டிரஸ் நல்லா இருந்தது" என்று அடுத்தக்கட்ட பேச்சை ஆரம்பித்து, இறுதியில் ஆபாச பேச்சில் வந்து முடிப்பாராம்..

கேஷூவல்
இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து நேற்று விசாரணை நடத்தினர்.. அப்போது, லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும், அவர் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்த விவரங்களையும் கேட்டனர்.. அதற்கு ஆன்றோ, எந்த ஒரு தயக்கமுமின்றி, போலீசாரின் கேள்விகளுக்கெல்லாம் கேஷூவலாக பதில் சொன்னாராம்..

கல்யாணம்
அதேபோல, லேப்டாப்பில் இருந்த பெண் யார்? அவருடனான தொடர்பு குறித்து போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த பெண்ணை தீவிரமாக தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், பாதிரியார் என்பதால் அந்த பெண்ணை தன்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும், எனினும், 2 பேருமே விருப்பப்பட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் பதிலளித்திருக்கிறார்.. மற்ற பெண்களின் போட்டோக்களை காட்டி, அவர்களை பற்றி போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த ஒரு பெண்ணிடம் மட்டும்தான் காதலித்ததாகவும், மற்றவர்களுடன் நட்பாக மட்டுமே பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகு, போலீசார் பாதிரியாரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.. அங்கு தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

9 மணி நேரம்
அதேபோல, பாதிரியார் பணியாற்றிய சர்ச்சுக்கும் அழைத்து சென்று, அங்கு விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.. விசாரணைக்கு பிறகு பாதிரியார் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். முதன்முதலில் பாதிரியார், கைதானபோது, அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார், "பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" என்று சொல்லி உள்ளார்.. இதற்கு பிறகுதான், நேற்றைய தினம் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட்கள்
இதனிடையே, வேறு சில தகவல்களும் பாதிரியார் குறித்து கசிந்து வருகிறது. சைபர் க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு இருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில், ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில் மட்டும் 30 பாதிரியார்களும், 13 பெண்களின் பெயர்களும் உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரமாகியிருக்கிறது.. ஆனால், அந்த குரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லையாம்... தான் நெருக்கமாக வீடியோகாலில் பேசும்போது, அந்த வீடியோக்களையும், மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களையும் இந்த க்ரூப்பில் பகிர்ந்து வந்திருக்கிறாராம் பாதிரியார்.

அபார்ஷன்
இதேபோல, திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபலமான டாக்டர் ஒருவர், பாதிரியார் பணிபுரிந்த சர்ச்சுக்கு அடிக்கடி வந்துபோயுள்ளது தெரியவந்துள்ளது.. இவர் நெய்யாற்றின்கரையை சேர்ந்தவராம்.. ஒருவேளை, பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க இந்த பெண் டாக்டர் உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது... இதற்கும் போலீஸ் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்கிறார்கள்... அதுமட்டுமல்ல, ஏற்கனவே பாதிரியார் அளித்த புகார்களையும்தாண்டி, மேலும் 4 பெண்கள் போலீசில் அவர் மீது புகார் தந்துள்ளார்களாம்.. நாளுக்கு நாள் பாதிரியார் மீது குவியும் புகார்களை கேள்விப்பட்டு, குமரி போலீசார மலைத்து போய் உள்ளனராம்..!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications