ரயில்வே பட்ஜெட்: புதிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா ? எதிர்பார்ப்பில் குமரி மக்கள்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மத்திய ரயில்வே பட்ஜெட் 25ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக புதிய ரயில்கள் இயக்கவும் ரயில் நீட்டிப்புக்கும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு இந்த ரயில்வே நிதிநிலை அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Kanyakumari District Rail Users expects new trains

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களை இயக்க வேண்டும் என்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

1.கன்னியாகுமரி - மதுரை இரட்டை இருப்புப்பாதை பணிகளை உடனடியாக துவங்க கோரிக்கை;.

தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாகவே கன்னியாகுமரி - மதுரை வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையையேற்று ரயில்வே நிர்வாகம் 2015-16 ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மதுரை - கன்னியாகுமரி வழித்தடம் இருவழிபாதையாக மாற்றப்படும் என்று அறிவித்தது.

அதன்படி மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் ஒரு திட்டம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைதொடர்ந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2.கன்னியாகுமரி - காரைக்குடி புதிய இரயில் பாதை அமைக்க கோரிக்கை:

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை

பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 462.47 கி.மீ தூரத்தில் ரூ.1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்கம்:

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட இரண்டாவது கட்ட பணிகளை உடனடியாக துவங்கப்பட வேண்டும். இரண்டாவது கட்ட பணிகளில் மூன்று 24 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள், ஆறு புதிய ஸ்டேபளிங் லைன்கள் மற்றும் நடைமேடை 1பி ஐயும் சேர்த்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட வேண்டும்.

4. கன்னியாகுமரியில் புதிதாக ரயில் முனையம் அமைத்தல்:

இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் இயக்கபட வேண்டும். தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிக்கும் பனிமனையில் இனி புதிதாக ரயில்களை பராமரிக்க இடநெருக்கடியாக உள்ளது. இதனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக மூன்று பிட்லைன்களும் சுமார் பத்து காலி ரயில் பெட்டிகளை

நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள் போர்கால நடவடிக்கையாக அமைக்க வேண்டும். இந்த வசதிகள் அமைத்தால் மட்டுமே கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் குமரி மாவட்ட பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற ரெயில்களாக மட்டுமே இயக்கபடவேண்டும். கேரளா பயணிகளின் வசதிக்காக இங்கிருந்து சுற்று பாதையில் ரெயில்களை இயக்குவதை கைவிடவேண்டும்.

5.நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனையை விரிவுபடுத்துதல்:

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சுமார் 350 ரயில் பெட்டிகள் பராமரிக்கபடுகிறது. இந்த பெட்டிகளில் எற்படும் பழுதுகளை சரிசெய்வதற்கு என ஒரு சிறிய அளவிலான பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் ஒரு ரயில் பெட்டியை மட்டுமே நிறுத்தி பழுதுபார்க்க முடியும். ஆகவே இந்த

பணிமனையை ஒரே நேரத்தில் ஐந்து பெட்டிகள் வரை பராமரிக்கும் எளவுக்கு அதன் நீளத்தை அதிகரித்து அதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

6.புதிய ரயில் நிலையங்கள்:-

குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகளின் நலன் கருதி சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும்

7.நாகர்கோவில் டவுண் (பள்ளிவிளை) ரயில் நிலையம்:

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு குடோனை நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து சிறப்பு ரயில்களை இங்கிருந்து இயக்க வேண்டும். நாகர்கோவில் டவுன் ரயில்

நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி - திருவனந்தபுரம் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துதிரப்படுத்த வேண்டும்.

8.ஆளுர் - நாகர்கோவில் வழியாக செட்டிகுளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை:

குமரி மாவட்டத்தில் உள்ள அளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. சங்கரன்கோவில் - திருநெல்வேலி புதிய பாதை:

திருநெல்வேலி - சங்கரன்கோவில் 160 கி.மீக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடுதல் வழித்தடம் அமைக்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

10.ரயில் நிலைய விரிவாக்கம்:-

திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் எனில் இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

11.மேலப்பாளையம் கிராசிங் பணிகளை துரிதப்படுத்துதல்:-

நெல்லை - நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது திருநெல்வேலியிருந்து 3.60 கி.மீ பகுதியை அதாவது தாமிரபரணி ஆற்றை கடந்து சிறிய தூரத்தில் மேலப்பாளையம் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை 2012-13 ரயில் பட்ஜெட்டில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்த மணிகள்

குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தூரிதப்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

12.கிராசிங் நிலையங்களை அதிகரித்தல்:-

நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள ரயில்வழித்தடங்களில் திருநெல்வேலி - திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடங்களில் கூடுதல் கிராசிங் நிலையங்களை அமைக்க வேண்டும்

இத்திட்டங்களுக்கு வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகளும் பொதுமக்களும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+