கொந்தளிப்பில் மீனவர்கள்- குளச்சலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு போராட்டம்
குளச்சலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்: ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி குளச்சல் மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓகி புயல் தாக்கி 10 நாட்களை கடந்த பின்னமும் கரை திரும்பாத மீனவர்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரே 601 மீனவர்களைக் காணவில்லை என கூறியுள்ளார்.

இதனால் கன்னியாகுமரியில் மிகப் பெரிய உயிரிழப்பும் சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. அத்துடன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்வையிடாமல் அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ஓகியில் சிக்கி பலியான மீனவர் ஜான்டேவிட்டின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற பொன். ராதாகிருஷ்ணன் இன்று குளச்சல் வருகை தந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆவேச முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications