நடனம், நடிப்பு, நாடகம்... அமர்க்களாக நடந்த காரைக்குடி நகராட்சிப் பள்ளி விருது வழங்கும் விழா
காரைக்குடி: கார்ப்பரேட் பள்ளிகளின் கண்கவர் ஆண்டு விழாவைப் பார்த்திருப்போம்.. ஆடம்பரமான நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்.. ஆனால் ஒரு நகராட்சிப் பள்ளி கொண்டாடிய அருமையான விருது வழங்கும் விழாவைப் பார்த்திருக்கீங்களா.. காரைக்குடியில் அப்படி ஒரு அட்டகாசமான விழா நேற்று முன்தினம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் 2 ம் ஆண்டு விருது வழங்கும் விழா காரைக்குடி சுபலெட்சுமி மகாலில் 25.02.16 அன்று அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
தனியார் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் பிரமிப்பூட்டும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமதி. கற்பகம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் சென்ற கல்வியாண்டில் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி அவர்கள் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சிறந்த மாணவர்களுக்கு விருதுகள்
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து சிறந்த மாணவர்களுக்கான விருதுகளை வழங்கினார். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் மாணிக்கம் ஆசிரியர்களுக்க்கான விருதுகளை வழங்கினார். சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி அவர்கள் சிறந்த தகவல் பலகைக்கான விருதை வழங்கினார்.

நூறு சதவீத வருகைக்கு விருது
பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் நூறு சதவீத வருகைக்கான விருதுகளை வழங்கினார்கள்.

சிறந்த வகுப்புக்கான விருது
தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி சிறந்த வகுப்பிற்கான விருதை வழங்கினார். மக்கள் மன்றத் தலைவர் ராசகுமார், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி,சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திர மோகன், காரைக்குடி நகரமன்ற துணைத்தலைவர் திரு.மெய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்களின் சபாஷ் பட்டிமன்றம்!
மாணவர்களை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவது கனிவா? கண்டிப்பா? என்ற தலைப்பில் மாணவர்கள் பட்டிமன்றம் நடத்தினர்.

நடனம் - தனி நபர் நடிப்பு
மாணவர்களின் நடனம், தனி நபர் நடிப்பு , நாடகம் மற்றும் நகைச்சுவை என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர்கள் பட்டாளம்
பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி மற்றும் மீனாட்சி ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி ஜெயம் மற்றும் கீதா சுந்தரேஸ்வரி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications